ஔவையிடம் முருகபெருமான் கேட்ட கேள்வியும், அவர் சொல்லும் பதில்களும்...
அரிது எதுவோ?
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே
கொடியது எது?
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர்கையால் இன்புற உண்பதுதானே!
பெரியது எது?
பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்.
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பில் வந்து
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகளில் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியொ அரவினுக்குற் ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே!
இனியது எது?
இனியது கேட்கின் வரிவடிவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவிடல் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் காண்பதுதானே
புதியது எது?
பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது.
முருகா உன்னைப் பாடும் பாடலென்றும் புதியது.