திருச்சிற்றம்பலம்
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே”
- திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் : இரண்டாம் திருமுறை
பொருளுரை :
தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, குளிர்ச்சி பொருந்திய இயற்கை அழகு மிகுந்து விளங்கும் பிரமபுரத்துள் சங்கு போன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன் தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்தில் எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச் சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.
திருச்சிற்றம்பலம்...