1. மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
பாடல் விளக்கம்:-
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
2. உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
பாடல் விளக்கம்:-
விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
3. கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
பாடல் விளக்கம்:-
கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
4. கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்
பாடல் விளக்கம்:-
எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
No comments:
Post a Comment